India A Squad for Australia A: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்தியா ஏ அணியின் கேப்டன்களாக ரஜத் படிதர் மற்றும் திலக் வர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

ஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஏற்கெனவே டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அணியின் கேப்டானாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணைக்கேப்டனாக துருவ் ஜூரெலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு ஜெகதீசன், சாய் சுதர்ஷ்சன் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக ராஜத் படித்தாரும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளுக்கான கேப்டனாக திலக் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் இந்திய ஏ அணிக்காக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள்னர். 

மேலும், ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் ஆசிய கோப்பை தொடரில் இடம் பிடித்துள்ளதன் காரணமாக முதல் போட்டியைத் தவறவிடும் நிலையில், கடைசி இரண்டு போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர ரியான் பராக், ரவி பிஷ்னோய், யுத்வீர் சிங், குர்ஜப்னீத் சிங், ஆயுஷ் படோனி, விப்ராஜ் நிகம், சூர்யன்ஷ் ஷெட்ஜ், நிஷாந்த் சிந்து, பிரப்சிம்ரன் சிங் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோருக்கு இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள், அடுத்து வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதால், இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விலையாடவுள்ளது. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: LIVE Cricket Score

இந்திய ஏ அணி: திலக் வர்மா (கேப்டன், கடைசி இரண்டு போட்டிகளுக்கு), ரஜத் படிதார் (துணைக்கேப்டன்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், ரியான் பராக், ஆயுஷ் படோனி, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுத்வீர் சிங், ரவி பிஷ்னோய், அபிஷேக் போரல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News