இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான ஆட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் டிசம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது. இதன்பிறகு இந்திய அணி ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்தியாவில் 9 ஒருநாள், 6 டி20, 4 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது.
அதன்படி 2023 ஜனவரி 3 முதல் ஜனவரி 15 வரை இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளிலும், ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1 வரை நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிப்ரவரி 9 முதல் மார்ச் 22 வரை 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் பொட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்த அனைத்து ஆட்டங்களிலும் கடைசியாக நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், சென்னையில் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்தியா - இலங்கை அட்டவணை
- முதல் டி20: ஜனவரி 3, மும்பை
- இரண்டாவது டி20: ஜனவரி 5, புணே
- மூன்றாவது டி20: ஜனவரி 7, ராஜ்கோட்
- முதல் ஒருநாள்: ஜனவரி 10, கௌகாத்தி
- இரண்டாவது ஒருநாள்: ஜனவரி 12, கொல்கத்தா
- மூன்றாவது ஒருநாள்: ஜனவரி 15, திருவனந்தபுரம்
இந்தியா - நியூசிலாந்து அட்டவணை
- முதல் டி20: ஜனவரி 18, ஹைதராபாத்
- இரண்டாவது டி20: ஜனவரி 21, ராய்பூர்
- மூன்றாவது டி20: ஜனவரி 24, இந்தூர்
- முதல் ஒருநாள்: ஜனவரி 27, ராஞ்சி
- இரண்டாவது ஒருநாள்: ஜனவரி 29, லக்னெள
- மூன்றாவது ஒருநாள்: பிப்ரவரி 1, ஆமதாபாத்
இந்தியா - ஆஸ்திரேலியா அட்டவணை
- முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாக்புரி
- இரண்டாவது டெஸ்ட்: பிப்ரவரி 17-21, டெல்லி
- மூன்றாவது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா
- நான்காவது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்
- முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை
- இரண்டாவது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம்
- மூன்றாவது ஒருநாள்: மார்ச் 22, சென்னை