ZIM vs IND, 2nd ODI: ஜிம்பாப்வேவை 161 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா!

Updated: Sat, Aug 20 2022 16:07 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் இன்றைய போட்டிகான இந்திய அணியில் தீபக் சஹாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார்.

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் கைடானோ 7 ரன்களிலும், கையா 16 ரன்களிலும், மதவெரே, கேப்டன் சகாப்வா ஆகியோர் தலா 2 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ரஸாவும் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் - ரியான் பார்ல் இணை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் 42 ரன்காளில் சீன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்க,. இதையடுத்து களமிறங்கிய வீரர்களுக்கும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் 38.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பார்ல் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை