IND vs SA, 2nd ODI: மார்க்ரம், ஹென்ரிக்ஸ் அரைசதம்; இந்தியாவுக்கு 279 இலக்கு!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. டி காக் 5 ரன்னில் அவுட்டானார். மலான் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்ரிக்சுடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் பொறுப்புடன் விளையாடினார். இருவரும் அரை சதம் கடந்தனர்.
இதனால் 3ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 129 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்ஸ் 74 ரன்னிலும், கிளாசன் 30 ரன்னிலும், மார்கிராம் 79 ரன்னிலும், பார்னெல் 16 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் மில்லர் 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்தியா சார்பில் சிராஜ் 3 விக்கெட்டும், ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 13 ரன்களிலும், ஷுப்மன் கில் 28 ரன்களோடும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 15 ஓவர்கள் மிடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா, பார்னெல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.