பாகிஸ்தன் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டி காக்!

Updated: Mon, Sep 22 2025 21:10 IST
Image Source: Google

South Africa tour Of Pakistan: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர்.

தென் ஆப்பிரிக்க அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த தொடர்களுக்கான அட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் தொடர் 12ஆம் தேதி முதலும், டி20 தொடர் அக்டோபர் 28ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் 4 முதலும் நடைபெறவுள்ளது.

அதிலும் குறிப்பாக இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஃபசிலாபாத்தில் உள்ள இக்பால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஃபசிலாபாத் கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் காகிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ் ஆகியோருக்கும் ஒருநாள், டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இதனால் டி20 அணியின் கேப்டனாக டேவிட் மில்லரையும், ஒருநாள் அணியின் கேப்டனாக மேத்யூ பிரிட்ஸ்கீயும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த டி காக், ஓய்வு முடிவை திரும்ப பெற்றதை தொடர்ந்து பாகிஸ்தான் ஒருநாள், டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் டெவால்ட் பிரீவிஸ், குவேனா மபாகா, நந்த்ரே பர்கர் உள்ளிட்டோருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: ஐடன் மார்க்ராம் (கேப்டன்), டேவிட் பெட்டிங்ஹாம், கார்பின் போஷ், டெவால்ட் பிரீவிஸ், டோனி டி ஸோர்ஸி, ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ் (இரண்டாவது டெஸ்ட் மட்டும்), வியான் முல்டர், செனுரான் முத்துசாமி, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரெனலன் சுப்ரயன், கைல் வெர்ரெய்ன்.

தென் ஆப்பிரிக்க டி20 அணி: டேவிட் மில்லர் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரீவிஸ், நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, லுங்கி இங்கிடி, நிகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஆண்டிலே சிமெலேன், லிசாட் வில்லியம்ஸ்

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: மேத்யூ பிரீட்ஸ்கே (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரீவிஸ், நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஸோர்ஸி, டோனோவன் ஃபெரீரா, ஜார்ன் ஃபோர்டுயின், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, லுங்கி இங்கிடி, நகாபா பீட்டர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், சினெதெம்பா கேஷிலே

 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை