U19 ஆசிய கோப்பை: கோப்பையை வென்றது இந்தியா!
அண்டர் 19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டி தொடங்கும் முன் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 38 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 38 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் விக்கி ஒஸ்ட்வால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இந்திய அணி இலக்கை துரத்திய போதும் மழைக்குறுக்கிட்டதால் இலக்கு 102 ரன்களாக குறைக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஹர்னூர் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால் மறுமுனையில் அங்க்ரிஷ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் 21.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அண்டர் 19 அணி ஆசிய கோப்பையை வெற்றிபெற்று அசத்தியது.