இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்: இப்போதைக்கு வாய்ப்பு இல்லை!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ஒருமனதாக முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாரியத்தின் தலைவராக அதிகாரபூர்வமாக நேற்று பதவி ஏற்றுக்கொண்ட ரமீஸ் ராஜா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், ''பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவி மிகவும் கடினமானது, சவாலானது. இதை உணர்ந்துதான் பிரதமர் இம்ரான்கான் என்னிடம் பொறுப்பை வழங்கியுள்ளார். அதை நான் மனநிறைவுடன் செய்வேன் என நம்புகிறேன்.
இந்தியா, பாகிஸ்தான் இரு அணிகளுக்கு இடையே இப்போதைக்கு கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை. அரசியல் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட்டை வீணாக்கிவிட்டது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது. நிதானமாகத்தான் செயல்பட வேண்டும். முதலில் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை வலுப்படுத்தவே அதிகமாக கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார்.