ஒரே அணியில் கோலி, பாபர் ஆசாம், அஃப்ரிடி; ஆவலுடன் ரசிகர்கள்!

Updated: Sun, Jun 19 2022 18:49 IST
India, Pakistan players to play in same team as Afro-Asia Cup return looms (Image Source: Google)

கடந்த 2005 முதல் 2007ஆம் ஆண்டுவரை ‘ஆப்ரோ ஆசிய கோப்பை’ என்ற பெயரில் பிரபல கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து லெவன் அணியில் இடம்பெற்று விளையாடினார்கள். இதனால், உலக அளவில் இத்தொடர் மிகவும் பிரபலாக இருந்தது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், இத்தொடர் அதன்பிறகு நடைபெறவில்லை.

நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கும் இந்த தொடரை மீண்டும் நடத்த, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி பிரபாகரன், அனைத்து அணிகளுக்கும் ஆப்ரோ ஆசிய கோப்பை தொடர் குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பதிலுக்காக காத்திருப்பதாகவும், பதில் வந்த உடன் இத்தொடர் பிரமாண்டமான அளவில் நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீப காலமாகவே முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஷ் ராஜா, பிசிசிஐக்கு பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில், அதற்கும் மேலான ஒரு தொடர் நடைபெறவுள்ளதால், இதற்கு பாகிஸ்தான் சம்மதிக்கும் எனக் கருதப்படுகிறது.

இத்தொடரின் மூலம் கிடைக்கும் வருவாய், சில நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுவதால், இந்தியாவும் சம்மதிக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், இம்முறை ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்களும் இத்தொடரில் இந்திய, பாகிஸ்தான் அணியுடன் இணைந்து விளையாட உள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு இடையிலான தனிப்பட்ட கிரிக்கெட் தொடர் 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டு அணிகளின் ஸ்டார் வீரர்கள் ஒரே அணியில் இணைந்து விளையாட உள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை