தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு! ரிஷப் பந்த் ரிட்டர்ன்!

Updated: Wed, Nov 05 2025 19:34 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியிலும் நடைபெற இருக்கிறது. 

அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 06ஆம் தேதி வரையிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது டிசம்பர் 09ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

அதன்படி, இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக காயம் காரணமாக பாகிஸ்தன் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதுடன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் டெவால்ட் பிரீவிஸ், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சென், ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில், ரிஷப் பந்த்  மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டதுடன், அணியின் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இங்கிலாந்து தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் தொடரை ரிஷப் பந்த் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் இத்தொடருக்கான அணியில் தமிழக வீரர் நாரயணன் ஜெகதீசன் நீக்கப்பட்டுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை தவறவிட்டிருந்த ஆகாஷ் தீப் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அவருடன் வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரெல், ஜஸ்பிரித் புமா, கேஎல் ராகுல், நிதிஷ் ரெட்டி உள்ளீட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பாவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரீவிஸ், டோனி டி ஸோர்ஸி, ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை