ஜூன் மாதத்தில் இலங்கை - இந்தியா தொடர் : உறுதி செய்த சௌரவ் கங்குலி 

Updated: Sun, May 09 2021 21:04 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  தொடரில் பங்கேற்பதற்காக இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்லவுள்ளது. மேலும், இங்கிலாந்து அணியுடனான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இத்தொடர் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்த பிறகு ஒரு மாதம் இடைவெளி இருப்பதால் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கங்குலி, “இந்திய அணி வருகிற ஜூன் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடும். அதேசமயம் இலங்கை செல்லும் இந்திய அணியும் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும். 

அதேசமயம் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை நடத்த நாங்கள் தீவிரமாக முயற்சித்து வருகிறோம். கூடிய விரைவில் ஐபிஎல் தொடருக்கான தகவலை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை