மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடருக்கான அட்டவணையை அறிவித்தது ஐசிசி!
ICC Women’s Cricket World Cup 2025 Schedule: எதிர்வரும் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சி நடத்தவுள்ள்ன.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது.
மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போதே இனி இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்ற அறிவிப்பையும் பிசிபி வெளியிட்டிருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை சமீபத்தில் அறிவித்தது. இதில் பாகிஸ்தான் மகளிர் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து இத்தொடரின் மற்ற போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, கௌகாத்தி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டிணத்தில் நடபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரின் முதல் போட்டியானது பெங்களூருவிலும், முதல் அரையிறுதி போட்டியானது கௌகாத்தில் அல்லது கொழும்புவிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி பெங்களூருவிலும், இறுதிப்போட்டியானது பெங்களூரு அல்லது கொழும்புவில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இன் முதல் போட்டி செப்டம்பர் 30 அன்று பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதேசமயம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 5ஆம் தேதி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
Also Read: LIVE Cricket Score
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 அட்டவணை
- செப்டம்பர் 30—இந்தியா vs இலங்கை—பெங்களூரு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 1—ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து—இந்தூர்—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 2—வங்கதேசம் vs பாகிஸ்தான்—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 3—இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா—பெங்களூரு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 4—ஆஸ்திரேலியா vs இலங்கை—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 5—இந்தியா vs பாகிஸ்தான்—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 6—நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா—இந்தூர்—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 7—இங்கிலாந்து vs வங்கதேசம்—குவஹாத்தி—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 8—ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 9—இந்தியா vs தென் ஆப்பிரிக்கா—விசாகப்பட்டினம்—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 10—நியூசிலாந்து vs வங்கதேசம்—விசாகப்பட்டினம்—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 11 - இங்கிலாந்து vs இலங்கை—குவஹாத்தி—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 12—இந்தியா vs ஆஸ்திரேலியா—விசாகப்பட்டினம்—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 13—தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்—விசாகப்பட்டினம்—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 14—நியூசிலாந்து vs இலங்கை—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 15—இங்கிலாந்து vs பாகிஸ்தான்—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 16—ஆஸ்திரேலியா vs வங்கதேசம்—விசாகப்பட்டினம்—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 17—தென் ஆப்பிரிக்கா vs இலங்கை—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 18—நியூசிலாந்து vs பாகிஸ்தான்—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 19—இந்தியா vs இங்கிலாந்து—இந்தூர்—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 20—இலங்கை vs வங்கதேசம்—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 21—தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான்—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 22—ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து—இந்தூர்—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 23—இந்தியா vs நியூசிலாந்து—குவஹாத்தி—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 24—பாகிஸ்தான் vs இலங்கை—கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 25—ஆஸ்திரேலியா vs இலங்கை—இந்தூர்—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 26—இங்கிலாந்து vs நியூசிலாந்து—குவஹாத்தி—காலை 11 மணி
- அக்டோபர் 26—இந்தியா vs வங்கதேசம்—பெங்களூரு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 29—அரையிறு 1—குவஹாத்தி/கொழும்பு—பிற்பகல் 3 மணி
- அக்டோபர் 30—அரையிறு 2—பெங்களூரு—பிற்பகல் 3 மணி
- நவம்பர் 2—இறுதி—கொழும்பு/பெங்களூரு—பிற்பகல் 3 மணி