ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் நடத்தப்படும், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் அடுத்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Advertisement

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.செப்டம்பர் 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் இறுதிப்போட்டியனது செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இந்த தொடருக்கு முன் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் ஐக்கிய அரபு அமீரக அணியுடன் இணைத்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இதில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை நேருக்கு நேர் மோதும் நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும் .

இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து பாகிஸ்தன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மேலும் இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானைத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை டி20 தொடர் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன.

Also Read: LIVE Cricket Score

முத்தரப்பு டி20 தொடர் அட்டவணை

  • ஆகஸ்ட் 29 – ஆஃப்கானிஸ்தான் v பாகிஸ்தான்
  • ஆகஸ்ட் 30 – ஐக்கிய அரபு அமீரகம் v பாகிஸ்தான்
  • செப்டம்பர் 1 – ஐக்கிய அரபு அமீரகம் v ஆஃப்கானிஸ்தான்
  • செப்டம்பர் 2 – பாகிஸ்தான் v ஆஃப்கானிஸ்தான்
  • செப்டம்பர் 4 – பாகிஸ்தான் v ஐக்கிய அரபு அமீரகம்
  • செப்டம்பர் 5 – ஆப்கானிஸ்தான் v ஐக்கிய அரபு அமீரகம்
  • செப்டம்பர் 7 – இறுதிப் போட்டி

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News