அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

Updated: Tue, Dec 12 2023 10:42 IST
Image Source: Google

ஐசிசி நடத்தி வரும் அண்டர்-19 உலகக்கோப்பை அடுத்ததாக 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. வரும் 2024 ஜனவரி 19 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை இத்தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. சொல்லப்போனால் முதலில் இத்தொடர் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் இலங்கை வாரியம் தடை பெற்றதால் இந்த உலகக்கோப்பை தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதிலிருந்து மொத்தம் டாப் 16 கிரிக்கெட் அணிகள் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்காக இறுதிப்போட்டியில் உட்பட 41 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் இத்தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் 2022 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நமீபியா, இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான், நேபாள், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 16 அணிகள் இத்தொடரில் விளையாட உள்ளன.

இந்த 16 அணிகளில் நடப்புச் சாம்பியன் இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய 4 அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும், குரூப் சி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் நேபாள் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்திய அணியின் லீக் சுற்று போட்டிகளின் அட்டவணை:

  • ஜனவரி 20, சனிக்கிழமை : இந்தியா – வங்கதேசம், ப்ளூம்ஃபோன்டைன்
  • ஜனவரி 25, வியாழக்கிழமை : இந்தியா – அயர்லாந்து, ப்ளூம்ஃபோன்டைன்
  • ஜனவரி 28 ஞாயிற்றுக்கிழமை : இந்தியா – அமெரிக்கா, ப்ளூம்ஃபோன்டைன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை