இலங்கைக்கு எதிராக புதிய அணி களமிறங்கும் - சௌரவ் கங்குலி!

Updated: Tue, May 11 2021 12:23 IST
Image Source: Google

இந்திய அணி வருகிற ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம்  மேற்கொண்டு மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ தலைவர் நேற்று அறிவித்தார். 

இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முற்றிலும் மாறுபட்ட புதிய இந்திய அணியை களம் இறக்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய  கங்குலி “இந்திய - இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடரை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜூலை மாதம் நடைபெறவுள்ள இந்த தொடரில் முற்றிலும் மாறுபட்ட இந்திய அணியை களமிறக்க திட்டமிட்டுள்ளோம் என்று” தெரிவித்துள்ளார். 

இந்திய அணி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரையிலான நாள்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதனால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியின் இரண்டாவது பிளேயிங் லெவன் கொண்ட வீரர்கள் தான் விளையாடுவார்கள் என தெரிகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை