கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீகம் மற்றும் ஓமனில் 7ஆவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
Advertisement
இத்தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியையே பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதாலும் பெரும் எதிர்பார்ப்புகள் நிழவி வருகின்றன.
Advertisement
இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் இந்திய அணியுடைய ஜெர்சி நாளை வெளியீடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த சீசனுக்கான இந்திய அணி இரு வடிவிலான ஜெர்சியை அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.