அடுத்தடுத்த போட்டிகளில் எங்கள் திறனை வெளிப்படுத்துவோம் - சமகா கருணரத்னே

Updated: Tue, Jul 20 2021 11:41 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஜுலை.18) கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி எந்தவிதம் சிரமும் இன்றி மிக எளிதாக வெற்றிப் பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1- 0 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் வெற்றி குறித்து இலங்கை அணியின் சமிகா கருணரத்னே கூறுகையில், "டாட் பந்துகளை விட விக்கெட்டுகளை பெறவே முயற்சித்தோம். எங்கள் பவுன்சர்களையும் எங்கள் வேகத்தையும் பயன்படுத்த முயற்சித்தோம். இந்தியா ஒரு சிறந்த அணி, அவர்கள் எங்களைத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்று எங்களுக்குத் தெரியும். 

நாங்கள் விக்கெட்டுகளை எடுத்திருந்தால், அவர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். பவர் பிளேயில் நாங்கள் ஒரேயொரு விக்கெட் மட்டுமே பெற முடிந்தது. பவர் பிளேயில் 2 அல்லது 3 விக்கெட்டை எடுத்திருந்தால், ஆட்டத்தின் போக்கை ஓரளவுக்கு மாற்றியிருக்கலாம்.

அதேசமயம் இங்கள் அணி வீரர்களுக்கு நல்ல தொடக்கங்கள் கிடைத்தன, ஆனால் அதனை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. நாங்கள் பெரிய இன்னிங்ஸை விளையாட முயற்சித்தோம். 42 அல்லது 43 வது ஓவரில் நான் ஷானகாவுடன் பேட்டிங் செய்தபோது கூட, நான் அவரிடம், "சில பெரிய ஷாட்களை அடிக்கலாமா?" என்று கேட்டேன். 

ஆனால், அவர் 45 வது ஓவர் வரை காத்திருக்கச் சொன்னார். எங்கள் பேட்ஸ்மேன்களில் நிறைய பேர் அதிக நேரம் பேட் செய்ய முடிந்திருந்தால், நாங்கள் ஒரு பெரிய ஸ்கோருக்குச் சென்றிருக்கலாம். 300 அல்லது 350 ரன்கள் அடிக்கும் திறன் எங்களுக்கு உள்ளது. இந்த போட்டியில் அதை தவறவிட்டாலும், அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை