வங்கதேசம் vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த பின் நியூசிலாந்தில் விளையாடி விட்டு நாடு திரும்பிய இந்திய அணி, அடுத்ததாக அருகில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ககிறது. அதில் வரும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. இதில் வலிமை வாய்ந்த இந்திய அணியை வங்கதேச அணி எப்படி சமாளிக்கப்போகிறது என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேச vs இந்தியா
- இடம் - ஷேர் பங்களா தேசிய மைதானம், தாக்கா
- நேரம் - பகல் 11.30 மணி
போட்டி முன்னோட்டம்
ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அடங்கிய முதன்மை அணி இத்தொடரில் களமிறங்குகிறது. அதற்காக ஏற்கனவே வங்கதேசம் பயணித்த இந்திய அணியினர் டாக்கா மைதானத்தில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மறுபுறம் சமீபத்திய ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை உள்ளிட்ட அனைத்து தொடர்களிலும் படுதோல்விகளை சந்தித்த வங்கதேசம் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் வெற்றி பாதையில் பயணிக்க போராட உள்ளது. பொதுவாகவே இந்தியாவுக்கு அவ்வப்போது அதிர்ச்சி தோல்விகளை கொடுக்கும் அணியாக கருதப்படும் வங்கதேசம் கடைசியாக சொந்த மண்ணில் கடந்த 2015ஆம் ஆண்டு இதே போல் 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
மிர்ப்பூரில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் 307 ரன்கள் குவித்து பின்னர் முஸ்தப்பிசூர் ரஹ்மான் 5 விக்கெட்டுகள் எடுத்ததால் இந்தியாவை 228 ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம் சூப்பராக வென்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற 2வது போட்டியிலும் மேஜிக் நிகழ்த்திய ரகுமான் 6 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை 200 ரன்கள் சுருட்டியதால் மீண்டும் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் கடைசி போட்டியில் தோற்றாலும் 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்ற வங்கதேசம் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக ஒரு தொடரை வென்று சரித்திரம் படைத்தது.
அதிலும் அந்நாட்டு ரசிகர்கள் தொடர் நாயகன் விருது வென்ற முஸ்தபிசுர் ரஹ்மான் கேப்டன் தோனி, ரகானே, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு பாதி மொட்டை அடித்தது போன்ற புகைப்படங்களை உருவாக்கி கிண்டலடித்து ஆட்டம் போட்டனர். எனவே அந்த பழைய கணக்குக்கு இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா பழி தீர்க்க வேண்டும் என்பதே அதை மறக்காமல் வைத்திருக்கும் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதற்கேற்றவகையில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான தமிம் இக்பால் மற்றும் டஸ்கின் அகமது இருவரும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்திய அணியிலிருந்து முகமது ஷமி விலகினாலும், அதிவேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் பலமாகவே பார்க்கப்பட்டுகிறது. இதனால் இத்தொடரில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 36
- இந்தியா - 30
- வங்கதேசம் - 05
- முடிவில்லை - 01
போட்டியைக் காணும் முறை
இந்தியா- வங்கதேச தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வர்க் ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் சோனி லிவ் செயலியிலும் இப்போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.
உத்தேச அணி
இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பந்த், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர்/உம்ரான் மாலிக், தீபக் சாஹர், முகமது சிராஜ்
வங்கதேசம் - லிட்டன் தாஸ் (கே), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி, மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், எபாடோட் ஹொசைன், ஹசன் மஹ்மூத்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்