ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இந்தியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Jun 26 2024 19:50 IST
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, அரையிறுதி 2 - இந்தியா vs இங்கிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டி (Image Source: Cricketnmore)

India vs England Semi Final 2Dream11 PredictionICC T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்களும், அபாரமான பந்துவீச்சாளர்களும் உள்ளனர். இதனால் சமபலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்கு நேர மோதவுள்ளதால் இதில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

IND vs ENG: Match Details

  • போட்டி தகவல்கள் - இந்தியா vs இங்கிலாந்து
  • இடம் - புராவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - ஜூன் 27, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

IND vs ENG: Pitch Report

கயானா கிரிக்கெட் மைதானமானது வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு சதகமான ஒன்றாக இருந்துள்ளது. மேலும் இந்த மைதானத்தில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் மூன்று முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் இங்கு பேட்டர்களாக தங்களுடைய ஷாட்களை விளையாடுவது கடினம். மேலும் இந்த மைதானத்தில் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs ENG: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 23
  • இந்தியா - 12
  • இங்கிலாந்து - 11
  • முடிவில்லை - 00

IND vs ENG: Live Streaming Details

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம்.

India vs England Predicted XIs

இந்தியா உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்து உத்தேச லெவன்: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி

IND vs ENG Dream11 Team

விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், பில் சால்ட்
பேட்டர்ஸ்: சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, விராட் கோலி
ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), மொயீன் அலி (துணை கேப்டன்), சாம் கரண்
பந்துவீச்சாளர்கள்: ஆதில் ரஷித், குல்தீப் யாதவ், ஜோஃப்ரா ஆர்ச்சர்

India vs England Fantasy Tips, IND vs ENG: Dream11 Team, India vs England: Predicted XIs, IND vs ENG Pitch Report, IND vs ENG Live Streaming Details, IND vs ENG: Head-to-Head, IND vs ENG: Dream11 Prediction Semi Final 2 ICC T20 World Cup 2024

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை