இந்தியா vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Jan 18 2023 10:57 IST
Image Source: Google

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம்

சில தினங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று தெறிக்கவிட்ட இந்திய அணியினர் அதே உத்வேகத்துடன் நியூசிலாந்தையும் எதிர்கொள்கிறார்கள். அக்டோபர், நவம்பரில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பதால், இந்த ஆண்டில் நடைபெறும் ஒவ்வொரு ஒரு நாள் போட்டிகளும் முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 4 இன்னிங்சில் 3 சதங்கள் அடித்து அட்டகாசப்படுத்திய இந்திய வீரர் விராட் கோலி இந்த தொடரிலும் சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் விலகி இருப்பதால் சூர்யகுமார் யாதவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது உறுதியாகி விட்டது. அத்துடன் டி20 போட்டி போன்று ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான அணியிலும் தனது இடத்தை தக்கவைக்க சூர்யகுமாருக்கு இதை விட சரியான சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.

இலங்கை தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கேஎல் ராகுலுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் நியூசிலாந்து தொடரில் இடம் பெறவில்லை. இதனால் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் களம் இறங்குகிறார். வங்தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு இரட்டை சதம் விளாசி உலக சாதனை படைத்தார். ஆனால் தற்போது ரோஹித் சர்மாவும், ஷுப்மான் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடுவதால், இஷான் கிஷன் மிடில் வரிசையில் பயன்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஏற்கனவே விலகி விட்டார். அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கலாம்.

நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் அந்த அணிக்கு பின்னடைவு தான். டாம் லாதம் கேப்டன் பொறுப்பை கவனிக்கிறார். சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் ஒரு நாள் தொடரை வென்ற கையோடு இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ், டெவான் கான்வே, டாம் லாதம், டேரில் மிட்செல் ஆகியோர் பேட்டிங்கிலும், பிரேஸ்வெல், சான்ட்னெர், பெர்குசன் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

பெரும்பாலான வீரர்களுக்கு இந்திய மண்ணில் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் இருப்பதால் இந்திய அணிக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 113
  • இந்தியா - 55
  • நியூசிலாந்து - 50
  • டிரா - 01
  • முடிவில்லை -07

உத்தேச லெவன்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி/ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, பிளேயர் டிக்னர், லோக்கி ஃபெர்குசன், டக் பிரேஸ்வெல்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - டாம் லாதம்
  • பேட்டர்ஸ் - விராட் கோலி, டெவான் கான்வே, சூர்யகுமார் யாதவ், ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - மைக்கேல் பிரேஸ்வெல், வாஷிங்டன் சுந்தர்
  • பந்து வீச்சாளர்கள் - இஷ் சோதி, குல்தீப் யாதவ், லோக்கி ஃபெர்குசன், முகமது சிராஜ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை