IND vs NZ, 1st Test: போட்டி முன்னோட்டம், உத்தேச அணி & ஃபேண்டஸி லெவன்!

Updated: Wed, Nov 24 2021 21:44 IST
Image Source: Google

 
இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி 3-0 என வென்றது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவ 5) முதல் கான்பூரில் நடக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3 முதல் மும்பை வான்கடேவில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் தான் களமிறங்கும். இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்துவது எந்த அணிக்குமே எளிதான காரியமல்ல. அந்தவகையில், ஸ்பின்னர்களை மீறி இந்திய அணியை வீழ்த்துவது நியூசிலாந்துக்கு பெரும் சவாலான காரியம்.

இந்த போட்டியில் விராட் கோலி ஆடாததால் அஜிங்கியா ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. கேஎல் ராகுலும் காயத்தால் தொடரைவிட்டு விலகிவிட்டார். எனவே மயன்க் அகர்வாலும் சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ஆம் வரிசையில் புஜாரா, 5ஆம் வரிசையில் கேப்டன் ரஹானே. 4ஆம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிராத ஷ்ரேயாஸ் ஐயர், இந்த போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலிங் காம்பினேஷனை பொறுத்தமட்டில் இந்திய அணி 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 ஃபாஸ்ட் பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் தான் ஆடும். அந்தவகையில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய 3 ஸ்பின்னர்கள் மற்றும் இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலர்கள் என்ற பவுலிங் யூனிட்டுடன் களமிறங்க வாய்ப்புள்ளது.

ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஸ்பின் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும் அஸ்திரம். அந்தவகையில், அதை நன்கறிந்த நியூசிலாந்து அணி, இந்திய கண்டிஷனுக்கு ஏற்ப திட்டங்களை வகுத்திருக்கிறது என்பதை நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட்டின் பேச்சிலிருந்தே அறிய முடிந்தது.

இந்தியாவில் வழக்கமான 4 ஃபாஸ்ட் பவுலர்கள் - ஒரு பார்ட் டைம் ஸ்பின்னர் என்ற மரபார்ந்த டெஸ்ட் காம்பினேஷன் செட் ஆகாது. இந்தியாவில் 3 ஸ்பின்னர்களுடன் ஆடவேண்டும் என்று கேரி ஸ்டெட் தெரிவித்திருந்தார். எனவே கான்பூரில் நடக்கும் முதல் டெஸ்ட்டில், நியூசிலாந்து அணி 3 ஸ்பின்னர்களுடன் ஆடும் என்று எதிர்பார்க்கலாம். 

இந்திய அணியும் கூட அஷ்வின், அக்ஸர், ஜடேஜா ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் தான் ஆடும். அந்தவகையில், நியூசிலாந்து அணியும் கண்டிப்பாக 3 ஸ்பின்னர்களுடன் தான் ஆடும்.  நியூசிலாந்து அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

டாம் லேதம் மற்றும் டாம் பிளெண்டல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ஆம் வரிசையில் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடுவார். 4ஆம் வரிசையில் நியூசிலாந்து அணியின் சீனியர் வீரர் ரோஸ் டெய்லரும், 5ம் வரிசையில் ஹென்ரி நிகோல்ஸும் விளையாடுவார்கள்.

பவுலிங் யூனிட்டை பொறுத்தமட்டில் 3 ஸ்பின்னர்கள் ஆடுவது உறுதி. அந்தவகையில், அஜாஸ் படேல், மிட்செல் சாண்ட்னெர், ராச்சின் ரவீந்திரா ஆகிய 3 ஸ்பின்னர்களும், நெய்ல் வாக்னர் மற்றும் கைல் ஜாமிசன் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

உத்தேச அணி

இந்தியா: மயங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்கியா ரஹானே (கேப்டன்), விருத்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.
 
நியூசிலாந்து: டாம் லேதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், டாம் பிளண்டெல், அஜாஸ் படேல், வில் யங், மிட்செல் சாண்ட்னெர், ராச்சின் ரவீந்திரா, கைல் ஜாமிசன், நெய்ல் வாக்னர்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - விருத்திமான் சாஹா
  • பேட்டர்ஸ் -  புஜாரா, ராஸ் டெய்லர், டாம் லாதம், கேன் வில்லியம்சன்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின்
  • பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், நீல் வாக்னர், அஜாஸ் படேல்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை