2nd T20I: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Nov 18 2021 14:45 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் நாளை இரவு நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - ஜெஎஸ்சிஏ சர்வதேச மைதானம், ராஞ்சி
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி தகவல்கள்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளது. அதிலும் பேட்ஸ்மேன்களில் ரோஹித், ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 

பந்துவீச்சில் அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அசத்தி வருவதால் நிச்சயம் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் டிம் சௌதி தலைமையிலான நியூசிலாந்து அணியும், போட்டியின் விழிம்பு வரை சென்று தோல்வியைத் தழுவியுள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறது. 

அணியின் மார்ட்டின் கப்தில், மார்க் சாப்மேன் இணை அபாரமாக விளையாடினாலும், பந்துவீச்சில் நியூசிலாந்து சில மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளைய போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால் தொடரை இலக்கும் என்பதால், நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • இந்தியா வெற்றி - 9
  • நியூசிலாந்து வெற்றி - 9

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், முகமது சிராஜ்.

நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், டாட் ஆஸ்டில், கிளென் பிலிப்ஸ், டிம் சைஃபர்ட், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சௌதி(கே), லோக்கி ஃபெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - டிம் செய்ஃபெர்ட்
  • பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்தில்
  • ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், வெங்கடேஷ் ஐயர்
  • பந்துவீச்சாளர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை