IND vs NZ: காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து சிராஜ் விலகல்?

Updated: Thu, Nov 18 2021 16:54 IST
INDIA VS NEW ZEALAND Mohammed Siraj Injury (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் முதலாவதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.

குறிப்பாக புவனேஸ்வர் குமார், அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் சாகர் ஆகியோர் ஒரு விக்கெட் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்நிலையில் அவர் அடுத்து வரும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவது தற்போது சந்தேகமாகி உள்ளது. ஏனெனில் இந்த முதலாவது டி20 போட்டியின் இருபதாவது ஓவரை வீசிய அவர் நியூசிலாந்து அணி வீரர் அடித்த பந்தை தடுக்க நினைத்த போது அவரது கையில் பந்து பலமாக தாக்கி ரத்தம் வடிந்தது. கையில் டேப் போட்டு மீதமுள்ள பந்துகளை வீசி ஓவரினை வெற்றிகரமாக முடித்தார்.

Also Read: T20 World Cup 2021

அவருக்கு ரத்தம் வருமளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தையல் போடும் நிலைமை உண்டாகி உள்ளது. இதன் காரணமாக எஞ்சியுள்ள அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. மேலும் அடுத்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர்-க்கு அவர் தயாராக வேண்டும் என்கிற காரணத்தினால் அவருக்கு ஓய்வளிக்க பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை