இந்தியா vs பாகிஸ்தான், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Oct 22 2022 18:42 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்துவிட்டன. இந்த தகுதிச் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிட்டன. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றுவிட்டன. இதில் இரு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச் சுற்றில் தோல்விகளை சந்தித்து, வெளியேறிவிட்டது.

இதனைத் தொடர்ந்து சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியயாவை அதன் சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றியுடன் தொடரைத் தொடங்கியுள்ளது. அதேபோல் நாளைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி மெல்போர்னில் மதியம் 1:30 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அணியில் பேட்டிங் குறைத்து எந்த கவலையும் இல்லை. பந்துவீச்சுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்நிலையில் அந்த குறையை தீர்க்க பிட்சே முன்வந்துள்ளது. ஆம், மெல்போர்ன் களம் வேகத்திற்கு சாதகமாக இருக்கும். எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் பந்துகளை இங்கு சிறப்பாக வீச முடியும்.

சமீபத்தில் பயிற்சி ஆட்டங்களின்போது, வேகத்திற்கு சாதகமான பிட்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பாகிஸ்தான் அணியிலும் பெரிய பேட்டர்கள் இல்லை. ஓபனர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வானை விரைந்து வீழ்த்திவிட்டால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக மாறிவிடும். இதனால், பாகிஸ்தான் அணிக்கு இந்திய நிச்சயம் பெரிய அளவில் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை, அங்கும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இருப்பினும், இந்திய அணியில் உள்ள அனைத்து பேட்டர்களும் சிறந்தவர்கள் என்பதால், இந்தியா அடித்து ஆடினால், பாகிஸ்தான் பௌலர்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும்.

இதனால் இந்திய பேட்டர்கள், பாகிஸ்தான் பௌலர்களுக்கு இடையிலான போட்டிதான் ஆட்டத்தை தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக ஷாஹீன் அஃப்ரீதி, ஹரிஸ் ராவுஃப் ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை என்றால், வெற்றிவாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கும்.

இந்திய அணியில் பேட்டிங் பலமாக இருக்கிறது. பந்துவீச்சுதான் பிரச்சினை. பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாலும், இந்தியா பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தில் பயிற்சி செய்தபோது சிறப்பாக பந்துவீசியதாலும் இந்திய அணியில் தற்போது எந்த குறையும் இல்லை என்றுதான் கருதப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சு துறை சிறப்பாக இருந்தாலும், பேட்டிங்கில் ஓபனர்களை நம்பித்தான் அந்த அணி இருக்கிறது. இவர்களை வீழ்த்திவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
  • இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 11
  • இந்தியா - 08
  • பாகிஸ்தான் - 03

உத்தேச லெவன்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவி அஷ்வின்/யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார்.

பாகிஸ்தான் – பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், ஷதாப் கான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, முகமது நவாஸ், முகமது வாசிம், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷஹீன் ஷா அஃப்ரிடி

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  • பேட்டர்ஸ் – சூர்யகுமார் யாதவ், பாபர் அசாம், கேஎல் ராகுல், விராட் கோலி
  • ஆல்-ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா, முகமது நவாஸ், ஷதாப் கான்
  • பந்துவீச்சு - ஷஹீன் ஷா அஃப்ரிடி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை