இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Wed, Oct 05 2022 20:29 IST
Image Source: Google

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் லக்னோவிலுள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரில் வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - எக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • டாஸ் நேரம் - மதியம் 1 மணி
  • போட்டி நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்தப் போட்டியில் ரோகித், கோலி, ராகுல் உள்ளிட்ட பல்வேறு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், டி20 உலககோப்பையில் பங்கேற்பதற்காக முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர்.

இதனையடுத்து, ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார். முதல் போட்டி வியாழக்கிழமை லக்னோவிலும், 2வது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை ராஞ்சியிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் செவ்வாய்கிழமை டெல்லியிலும் நடைபெறுகிறது. 

சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மான் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் ஷிகர் தவானுக்கு பதில் ஜோடியாக சுப்மான் களமிறங்குவாரா இல்லை ருத்துராஜ் இறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதே போன்று நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. 

ஐபிஎல் தொடரில் கலக்கிய ரஜத் பட்டிதார் 6ஆவது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஸ்னாய் விளையாட உள்ளனர். வேகப்பந்துவீச்சாளராக தீபக் சாஹர், முகமது சிராஜ்,ஆவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் பேட்டிங் கொஞ்சம் பலவீனமாக உள்ளது. முதல் 6 வீரர்கள் தான் பேட்டிங் செய்வது போல் அணி அமைக்கப்பட்டுள்ளது. தீபக் சாஹர் 7வஆது வீரராக பேட்டிங் செய்வது போல் அணி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி பேட்டிங்கில் ஒரு வீரர் குறைவாக உள்ளது. இதனை சமாளிக்க ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமதை இந்தியா பயன்படுத்தலாம். மாறாக தென்னாப்பிரிக்க அணி முழு பலத்துடன் களமிறங்குவதால், இந்தியாவுக்கு கொஞ்சம் சிக்கல் தான்.

அதேசமயம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியில் ஜென்மேன் மாலன், பெஹ்லுக்வாயோ ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளது அணிக்கு பலத்தை கூட்டியுள்ளது. அதுத்தவிர குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர் போன்றோர் பேட்டிங்கில் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

மேலும் பந்துவீச்சில் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னெல், காகிசோ ரபாடா போன்ற வேகப்புயல்களும், கேஷவ் மஹாராஜ், தப்ரைஸ் ஷம்ஸி போன்று சுழற்பந்துவீச்சாளர்களும் நிச்சயம் இளம் இந்திய அணிக்கு சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -87
  • இந்தியா - 35
  • தென் ஆப்பிரிக்கா - 49
  • முடிவில்லை - 3

உத்தேச அணி

இந்தியா - ஷிகர் தவான் (கே), ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ்
    
தென் ஆப்பிரிக்கா - ஜன்னெமன் மலான், குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், சஞ்சு சாம்சன்
  •      பேட்டர்ஸ் – ஷிகர் தவான், ஜனனிமன் மாலன், ஷுப்மான் கில், டேவிட் மில்லர்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், டுவைன் பிரிட்டோரியஸ்
  •      பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, தீபக் சாஹர், குல்தீப் யாதவ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை