IND vs SA, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Jun 14 2022 12:16 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டனத்தில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே 5 போட்டிகள் கொண்ட தொடரில் நீடிக்க முடியும். இல்லையென்றால் தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக 3வது போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிவிடும்.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - விசாகப்பட்டினம்
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. முதல் போட்டியில் பேட்டிங்கில் ஜொலித்த இந்திய அணி, பந்துவீச்சில் கோட்டைவிட்டது. இதனால், 200 ரன்களுக்கு மேல் அடித்தபோதும் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவியது. 2ஆவது போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியின் பேட்டிங் இல்லை. இதனால் 150 ரன்களுக்குள்ளாக சுருண்டு, தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்தது.

டாப் ஆர்டர்கள் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரண்டு போட்டிகளிலும் தொடக்கம் இதுவரை சிறப்பாக இருக்கவில்லை. இஷான் கிஷனின் பேட்டிங் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும், ஒரு அணியாக ஒவ்வொரு வீரரும் பங்களிப்பு செய்ய தவறுவதால், தோல்வியை தவிர்க்க முடியவில்லை. 

கேப்டன் ரிஷப் பந்தின் பேட்டிங்கும் மோசமாக இருக்கிறது. கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை இக்கட்டான சூழ்நிலைகளில் அவர் எடுக்கும் முடிவு, இதுவரை அவருக்கு பாதகமாகவே அமைகிறது. கடந்த இரு போட்டிகளிலும் செய்த தவறுகளை திருத்திக் கொண்டால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த முடியும். 

அதேசமயம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கட்டுக்கோப்பாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது. பேட்டிங்கில் மில்லர் மற்றும் வாண்டர் டெசன் ஆகியோர் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்தினால் இந்திய அணி வெற்றி குறித்து சற்று யோசித்து பார்க்கலாம். 

வாழ்வா? சாவா? என்ற சூழலில் இந்திய அணி களமிறங்குவதால், இந்தப் போட்டியை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.  இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • இந்தியா வெற்றி - 9
  • தென் ஆப்பிரிக்கா வெற்றி - 8

உத்தேச லெவன்

இந்தியா - இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர்/ தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (கே), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான்.

தென் ஆப்பிரிக்கா - டெம்பா பவுமா (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ்/ குயின்டன் டி காக், டுவைன் பிரிட்டோரியஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென் , டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், ஹென்ரிச் கிளாசன்
  •      பேட்டர்ஸ் - இஷான் கிஷன், ராஸ்ஸி வான் டெர்-டுசென், டேவிட் மில்லர்
  •      ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ்
  •      பந்துவீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ககிசோ ரபாடா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை