இந்தியா vs இலங்கை, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Jan 02 2023 19:21 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறிப்பாக நடப்பாண்டில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டி இது என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி தகவல்கள்

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் இந்த டி20 அணியில் இடம்பெறவில்லை. இதே போன்று கேஎல் ராகுல் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலைமையில் இந்திய டி20 அணி புதிய தொடக்கத்தில் அடியேடுத்து வைக்கிறது.

டி20 உலககோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது தொடக்க ஜோடி தான். இதனால், இந்திய அணி, இந்த தொடரில் புதிய ஜோடியை களமிறக்குகிறது. இஷான் கிஷன், சுப்மான் கில் ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளது. கூடுதல் தொடக்க வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார்.

இதே போன்று நடுவரிசையிலும் முற்றிலும் இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பர் 3ஆவது வீரராக களமிறங்குகிறார். இதே போன்று நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ஆல் ரவுண்டர் தீபக் ஹுடா 5ஆவது இடத்திலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 6ஆவது இடத்திலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோருடன் அறிமுக வீரர்களாக ஷிவம் மாவி, முகேஷ் குமாரும் இருப்பதால் நிச்சயம் இந்த பந்துவீச்சு யூனிட் எதிரணிக்கு சவலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஆசிய கோப்பையை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருந்தாலும், உலகக்கோப்பை தொடரில் பெரிதளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் அந்த அணியையும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. 

ஏனெனில் அதிரடி வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பதும் நிஷங்கா, பனுகா ராஜபக்ஷா, தனஞ்செய டி சில்வா ஆகியோரு பேட்டிங்கில் எதிரணி பந்துவீச்சாளர்களை புரட்டியெடுக்கும் திறன் கொண்டவர்கள். இவர்களில் யாரெனும் ஒருவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அது எதிரணிக்கு பிரச்சனைதான்.

அதேபோல் பந்துவீச்சில் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் திக்ஷனா என இரு மாயாஜால சுழற்பந்துவீச்சாளர்கள் சமீக காலங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்துள்ளனர். அவர்களுடன், லஹிரு குமாரா, தில்சன் மதுசங்கா, கசுன் ரஜிதா ஆகியோரும் அணியில் இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 26
  • இந்தியா - 17
  • இலங்கை - 8
  • முடிவில்லை - 1

உத்தேச லெவன்

இந்தியா – இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா (கே), சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

இலங்கை – பாத்தும் நிஷங்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, தில்ஷன் மதுஷங்க.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குசல் மெண்டிஸ், இஷான் கிஷான்
  • பேட்டர்ஸ் – சூர்யகுமார் யாதவ், பானுகா ராஜபக்ஷ, பாத்தும் நிசங்க
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, வனிந்து ஹசரங்க, தீபக் ஹூடா
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மகேஷ் தீக்ஷனா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை