இந்தியா vs இலங்கை, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Jan 04 2023 22:25 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை புனேவிலுள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி20 தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
  • இடம் - மஹாராஷ்டிரா கிரிக்கெட் மைதானம், புனே
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி தகவல்கள்

இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதிலும் இந்திய அணியின் டாப் ஆர்டரான ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதேசமயம் இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, அக்ஸர் படேல் ஆகியோர் பேட்டிங்கில் பங்களிப்பு செய்தது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பந்துவீச்சில் அறிமுக வீரர் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருடன் உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் இருப்பது அணியின் வலிமையை அதிகரித்துள்ளது.

இருப்பினும் ஹர்ஷல் படேல் அதிகமான ரன்களைக் கொடுத்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்த போட்டியில் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அல்லது முகேஷ் குமார் ஆகியோரில் ஒருவர் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சஞ்சு சாம்சனுக்கு காயம் என்று தகவல் வெளியாகியுள்ளதால், நாளைய போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதேசமயம் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் ஏறத்தாழ இலக்கை எட்டி, கடைசி கட்டத்தில் தோல்வியை சந்தித்தது. அதிலும் பேட்டிங்கில் கேப்டன் ஷனகா மற்றும் கருணரத்னே, ஹசரங்கா ஆகியோர் செயல்பட்ட விதம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மஹீஷ் தீக்க்ஷனா, வநிந்து ஹசரங்கா ஆகியோரத் தவிர்த்து மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் இப்போட்டியில் அந்த அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 27
  • இந்தியா - 18
  • இலங்கை - 8
  • முடிவில்லை - 1

உத்தேச லெவன்

இந்தியா – இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா (கே), சஞ்சு சாம்சன்/ ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல்/ அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

இலங்கை – பாத்தும் நிஷங்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க ஃபெர்னாண்டோ, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, தில்ஷன் மதுஷங்க.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குசல் மெண்டிஸ், இஷான் கிஷான்
  • பேட்டர்ஸ் – சூர்யகுமார் யாதவ், பதும் நிஷங்கா, தீபக் ஹூடா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, வனிந்து ஹசரங்க, தசுன் ஷனகா
  • பந்துவீச்சாளர்கள் - தில்சன் மதுஷங்கா, ஷிவம் மாவி, உம்ரான் மாலிக்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை