India vs Sri Lanka, 2nd Test – போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

Updated: Thu, Mar 10 2022 18:01 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

இதில் மொஹாலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் பெங்களூருவிலுள்ள எம்.சின்னஸ்வாமி மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
  • இடம் - எம்.சின்னஸ்வாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - மதியம் 2 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையில் முதல் முறையாக களமிறங்கிய இந்திய டெஸ்ட் அணி முதல் டெஸ்ட் போட்டியிலேயே இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்தியது. 

இதே உத்வேகத்துடன் அடுத்தப்போட்டிக்கும் இந்திய அணி தயாராகி வருகிறது. மேலும் இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மேலும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பவுலிங் என மிரட்டி வருவதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள. அதேபோல் இப்போட்டிக்கான இந்திய அணியில் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டுள்ளதால் இப்போட்டியில் அவரும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் படுமட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியைச் சந்தித்துள்ளது.

அந்த அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறையிலும் வலிமைப்பெற வேண்டும் என்பதால் அந்த அணியில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -25
  • இந்தியா வெற்றி - 17
  • இலங்கை வெற்றி - 7
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா (கே), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ்/ அக்சர் படேல், முகமது ஷமி/ முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா

இலங்கை - திமுத் கருணாரத்ன (கே), லஹிரு திரிமான்ன, பதும் நிஷங்க, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்லா, சுரங்க லக்மால், விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, துஷ்மந்த சமீரா

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்:

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ரோஹித் சர்மா, பதும் நிஷங்க, திமுத் கருணாரத்னே
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை