India vs Sri Lanka, 3rd T20I- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ்!

Updated: Sun, Feb 27 2022 13:33 IST
Image Source: Google

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இலங்கை
  • இடம் - தர்மசாலா
  • நேரம் - இரவு 7 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான முதலிரு டி20 போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் கடந்த போட்டியில் இஷான் கிஷான் காயமடைந்துள்ளதால் அவர் இப்போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. அவருக்கு மாற்றாக மயங்க் அகர்வால் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மேலும் பந்துவீச்சாளர்களில் புவ்னேஷ்வர் குமார் மீண்டும் தனது ஃபார்முக்கு திரும்பியுள்ளது பெரும் ஆறுதலை இந்திய அணிக்கு அளித்துள்ளது. 

தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி இரண்டாவது டி20 போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும்,  பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 

இப்போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடையுமொனில் டி20 தொடரை முழுவதுமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • இந்தியா வெற்றி -16
  • இலங்கை வெற்றி - 7
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா (கே), மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா/ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா/ முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை - பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால்/தனஞ்செய டி சில்வா, ஜனித் லியனகே, தசுன் ஷனக (கே), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பிரவீன் ஜெயவிக்ரம, ஜெப்ரி வான்டர்சே, லஹிரு குமார.

ஃபேண்டஸி டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - சஞ்சு சாம்சன்
  • பேட்டர்ஸ் - ஸ்ரேயாஸ் ஐயர், சரித் அசலங்கா, ரோஹித் சர்மா,பதும் நிஷங்கா
  • ஆல்-ரவுண்டர்கள் - வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, தசுன் ஷனகா
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், துஷ்மந்த சமீரா, லஹிரு குமார.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை