வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, Jul 29 2022 12:21 IST
India vs West Indies, 1st T20I - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable XI (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
  • இடம் - பிரையன் லாரா மைதானம், டிரினிடாட்.
  • நேரம் - இரவு 8 மணி

போட்டி முன்னோட்டம்

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில்  சீனியர் வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடக்க வீரராக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் கரோனா காரணமாக இந்த தொடரில் விளையாடவில்லை, இதனையடுத்து ரோஹித் சர்மாவுக்கு ஜோடியாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா இல்லை இங்கிலாந்து தொடர் போல் ரிஷப் பந்திற்கு ஓப்பனிங் வாய்ப்பு தரப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது விராட் கோலி இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 அரைசதம் விளாசி இருக்கிறார். இதனால் அவருக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.

கடைசியாக 5 போட்டியில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ்க்கு இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதே போன்று ஹர்திக் பாண்டியா பிளேயிங் லெவனில் தனது இடத்துக்கு திரும்பி விடுவார். மேலும், தினேஷ் கார்த்திக்கிற்கும் இந்த தொடரில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதே போன்று ஜடேஜா நாளைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அக்ஸர்  பட்டேலுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என தெரிகிறது. சாஹல் ஒரே ஸ்பெஷல் ஸ்பின்னராக அணியில் இருப்பார். வேகப்பந்துவீச்சில் ஹர்ஸ்தீப் சிங்கிற்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் ஹர்சல் பட்டேல்,புவனேஸ்வர் குமார் தங்களத இடத்தை உறுதி செய்து கொள்வார்கள்.

அதேசமயம் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அதிலும் ஹெட்மையர், பூரன், பாவெல் போன்ற நட்சத்திர வீரர்கள் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • வெஸ்ட் இண்டீஸ் - 6
  • இந்தியா - 13
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

வெஸ்ட் இண்டீஸ்- நிக்கோலஸ் பூரன் (கே), ரோவ்மேன் பவல், ஷிம்ரோன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹோசின், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், கீமோ பால், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

இந்தியா - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்

ஃபெண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த்
  •      பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷாய் ஹோப்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, கைல் மியர்ஸ்
  •      பந்துவீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், அல்ஜாரி ஜோசப், ஹர்ஷல் படேல்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை