வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Jul 26 2022 20:11 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியாவுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், 3ஆவது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

3ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா
  • இடம் - குயின்ஸ்பார்க் ஓவல், டிரினிடாட்
  • நேரம் - இரவு 7 மணி 

போட்டி முன்னோட்டம்

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால் கடைசி போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். தொடக்க வீரராக ஷுப்மன் கில்லுக்கு பதிலாக, முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு பெறாத ருதுராஜ் கெய்க்வாட் இறக்கப்படலாம். 

மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜுக்கு பதிலாக இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகலாம். இஷான் கிஷனும் முதல் 2 போட்டிகளில் ஆட வாய்ப்பு பெறவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் நன்றாக செய்துவருகிறார். 2ஆஅவது போட்டியில் பேட்டிங்கும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். எனவே அவருக்கு தொடர் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டாலும், பந்துவீச்சில் சில தவறுகளை மேற்கொண்டதே அணியின் தோல்விக்கு காரண்மாக அமைந்துள்ளது.

பேட்டிங் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங் ஆகியோருடன் கேப்டன் நிக்கோலஸ் பூரனும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.

அதேபோல் பந்துவீச்சில் அகீல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஜெய்டான் சீல்ஸ், ரோவ்மன் பாவல் இருப்பதும் இந்திய அணிக்கு தலைவலியாம அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 138
  • இந்தியா - 69
  • வெஸ்ட் இண்டீஸ் - 63
  • டிரா - 2
  • முடிவில்லை - 4

உத்தேச அணி 

வெஸ்ட் இண்டீஸ் - ஷாய் ஹோப், பிராண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (கே), ரோவ்மேன் பவல், அகேல் ஹொசைன், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்

இந்தியா - ஷிகர் தவான் (கே), சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்/பிரசித் கிருஷ்ணா

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன்
  •      பேட்டர்ஸ் - ஷிகர் தவான், ஷுப்மான் கில், ஷாய் ஹோப், ஷமர் புரூக்ஸ்
  •      ஆல்-ரவுண்டர்கள் - கைல் மேயர்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், தீபக் ஹூடா
  •      பந்து வீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், அல்சாரி ஜோசப், அர்ஷ்தீப் சிங்/பிரசித் கிருஷ்ணா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை