செப்டம்பரில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி!

Updated: Tue, May 18 2021 17:53 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் மற்றும் சில காரணங்களினால் அத்தொடர் நடைபெறவில்லை. 

இந்நிலையில் அந்த தொடர் தற்பொழுது வருகிற செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்காட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், செப்டம்பர் மாதம் இந்திய மகளிர் அணிக்கு எதிராக டி20 போட்டிகள் நடக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிக் பாஷ் லீக், மகளிர் கிரிக்கெட் தொடர், ஆஷஸ், உலக கோப்பை மற்றும் காமன்வெல்த் போட்டிகள் நடக்க இருப்பதால் இனி தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாட போவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய மகளிர் அணி மிக மோசமாக விளையாடி தொடரை கைவிட்டது. தற்போது இந்திய மகளிர் அணிக்கு ரமேஷ் பவார் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் இந்திய மகளிர் அணி இம்மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

அதன்படி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாட உள்ளது. மேலும் இவ்விரு அணிகளுக்கும் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல்  டெஸ்ட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை