உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட் இதுதான் - உஸ்மான் கவாஜா!

Updated: Sun, Aug 22 2021 21:00 IST
Image Source: Google

இந்திய அணி முன்னெப்போதையும் இல்லாத அளவிற்கு இப்போதுதான் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்றிருக்கிறது. பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, நடராஜன், ஷர்துல் தாகூர் என அனைத்துவிதமான வேகப்பந்து வீச்சாளர்களையும் கொண்ட நல்ல வலுவான அணியாக திகழ்கிறது.

முன்னெப்போதையும் விட சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி பெற்றிருக்கும் நிலையில், இப்போதைய சூழலில் இந்திய அணியின் பவுலிங் யூனிட் தான் உலகின் மிகச்சிறந்த பவுலிங் யூனிட் என்று முன்னாள், இந்நாள் வீரர்கள் பலர் புகழ்ந்துவருகின்றனர்.

இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதால் தான் இந்திய அணி இங்கிலாந்தில் அபாரமாக ஆடி இங்கிலாந்து மண்ணில் அந்த அணி மீது ஆதிக்கம் செலுத்திவருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து பேசிய உஸ்மான் கவாஜா, “இப்போதைய சூழலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சளர் தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சு யூனிட்.  மிகச்சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர்.  பும்ரா உலகின் சிறந்த பவுலர்களில் ஒருவர். அவர் ஒரு ஜீனியஸ்.  இஷாந்த் சர்மாவும் சிறந்த பவுலர்; நல்ல லெந்த்தில் வீசக்கூடியவர். அவரது அனுபவம், இங்கிலாந்து கண்டிஷனில் இந்திய அணிக்கு உதவும். 

அடுத்தது முகமது ஷமி. உலகின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட பவுலர் என்றால் அது ஷமி தான்.  பேட்ஸ்மேன் நினைப்பதைவிட வேகமாக வரும் ஷமியின் பந்து. திறமையில் அவர் அருமையான பவுலர். அவர் சீம்-ஐ பயன்படுத்தும் விதம் அபாரமானது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை