இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் உடமைகள் திருட்டு; இங்கிலாந்தில் புதிய சர்ச்சை!

Updated: Tue, Sep 27 2022 11:04 IST
Indian Keeper-Batter Taniyaa Bhatia Claims Robbery Of Belongings In London; Slams ECB Over Lack Of S (Image Source: Google)

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் இந்திய அணி 3 - 0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி கண்டது.

இந்த தொடரின் முடிவு சர்ச்சையுடன் தான் இருந்தது. 3ஆவது ஒருநாள் போட்டியின் போது இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் முறையில் ரன் அவுட் செய்து விக்கெட் எடுத்தது சர்ச்சையை கிளப்பியது. ஏமாற்றி வெற்றி பெற்றார்கள் என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டினர். இந்த சர்ச்சையே ஓயாத நிலையில் தற்போது புதிய பூகம்பம் கிளம்பியுள்ளது.

இந்திய வீராங்கனை தானியா பாட்டியா தனது உடமைகளை இங்கிலாந்து ஓட்டல் அறையில் திருடிவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த தானியா, " இந்திய அணி மேரியட் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமாக இருந்தன. எனது தனிப்பட்ட அறையில் யாரோ ஒருவர் நுழைந்து பணம், கார்டுகள், வாட்ச்சுகள் மற்றும் விலை உயர்ந்த நகைகளை திருடிச்சென்றுள்ளார்.

இங்கிலாந்தில் இது போன்று நடந்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கிலாந்து வாரியத்தின் விருப்பமான ஹோட்டலில் இதுபோன்று நடப்பது ஏற்புடையது அல்ல” எனவும் அதிருப்தி கூறியுள்ளார்.

இதற்கு ஹோட்டல் நிர்வாகமும் பதில் கொடுத்துள்ளது. அதில், " உங்களுக்கு நடந்த சம்பவத்திற்கு வருந்துகிறோம். உங்களின் பெயர், இமெயில் முகவரி மற்றும் நீங்கள் தங்கியிருந்த தேதிகள் குறித்த விவரங்களை கொடுங்கள். நாங்கள் விசாரிக்கிறோம்” எனக்கூறியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை