இந்திய அணி டெஸ்ட் தொடரை எளிதில் கைப்பற்றும் - தினேஷ் கார்த்திக்!

Updated: Tue, Dec 07 2021 22:18 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இத்தொடர் சற்று தாமதமாக டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இது மிகவும் முக்கியமான தொடர். அதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. கோலி தலைமையிலான இந்திய அணி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் என வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட அணியாக திகழ்கிறது. 

பவுலிங்கிலும் அஸ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி, சிராஜ் என சிறந்த பவுலர்களை கொண்ட அணியாக உள்ளது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி ஒருசில வீரர்களையே அதிகமாக சார்ந்துள்ளது. அதனால்தான் இந்திய அணி எளிதாக ஜெயித்துவிடும் என்று தினேஷ் கார்த்திக் நம்புகிறார்.

இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், “தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு. இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும். இந்திய அணியின் பவுலிங்,பேட்டிங் என இரண்டுமே சிறப்பாக உள்ளது. 

ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் மோசமாக உள்ளது. ரபாடா, நோர்ட்ஜே மற்றும் சில பவுலர்களுடன் தென் ஆப்பிரிக்க பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. ஆனால் பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்க அணி ஒன்றிரண்டு வீரர்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. எனவே இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எளிதாக வீழ்த்திவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை