பரிசு தொகையிலும் பாரபட்சம் காட்டும் பிசிசிஐ; சர்வதேச கிரிக்கெட்டில் வெடித்தது அடுத்த சர்ச்சை!

Updated: Mon, May 24 2021 18:38 IST
Image Source: Google

கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரெலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. மேலும் இப்போட்டியை 86,000 க்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

இந்நிலையில் இத்தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு, 5 லட்சம் டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் தொடர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்துள்ள நிலையிலும் பிசிசிஐ அத்தொகையை வீராங்கனைகளுக்கு வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகவில்லை. 

இதுகுறித்து ஐசிசியின் தலைமை நிர்வாக அலுவலர் டாம் மொஃபாட் கூறுகையில், "கிரிக்கெட் விளையாட்டுகளில் வீரர்களின் கள செயல்திறனுக்கான பரிசுத் தொகை வழங்கப்படுகிறது, இந்தப் பரிசுத்தொகையை தாமதமாக கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

போட்டி முடிவடைந்த ஒரு வாரத்திற்குள் பரிசுத் தொகையை செலுத்துவதை ஐ.சி.சி (ICC) உறுதி செய்துள்ளது. வழக்கமாக, வீரர்களுக்கு நேரடியாக பணம் செலுத்தும்படி குறிப்பிட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கேட்காவிட்டால், பரிசுத்தொகை அணியின் நிர்வாக வாரியத்திடம் வழங்கப்படும்.  

அதன்படி தொடர் முடிந்த ஒரு வாரத்திற்கு உள்ளாகவே ஐசிசி பரிசுத்தொகையை பிசிசிஐயிடம் வழங்கிவிட்டது. ஆனால் அவர்கள் இதுநாள் வரை வீராங்கனைகளுக்கு தொகையை பிரித்தளிக்க வில்லை. இதுகுறித்து ஐசிசி அனுப்பிய கடிதத்திற்கும் பிசிசிஐ எந்தவித பதிலையும் வழங்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இது தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் கலந்து கொண்ட மகளிர் கிரிக்கெட் அணியில் உள்ள 15 வீராங்கனைகளுக்கு   தலா 33,000 டாலர்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை