பாகிஸ்தானிடம் இந்திய அணி பயந்தது - இன்சமாம் உல் ஹக்!

Updated: Fri, Nov 26 2021 20:52 IST
'Indians Were Scared Against Pakistan In The T20 World Cup 2021 Clash' (Image Source: Google)

டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்தது. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் மோதுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சபட்சமாக இருந்தது.

உலக கோப்பைகளில் பாகிஸ்தானிடம் தோற்றதேயில்லை என்ற 100 சதவிகித வெற்றி விகிதத்துடன், பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, அந்த சாதனையை தொடரும் முனைப்பில் அந்த போட்டியில் ஆடியது. உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பெறும் முனைப்பில் பாகிஸ்தான் ஆடியது.

பொதுவாகவே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணி தான் ஜெயிக்கும். எப்போதுமே அதை மிகச்சரியாக செய்யும் இந்திய அணி, டி20 உலக கோப்பை போட்டியில் அதில் கோட்டைவிட்டது. இந்திய அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்ப, பாகிஸ்தான் அணியோ அதற்கு நேர்மாறாக பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசத்தி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பாபர் அசாமின் கேப்டன்சியும் சிறப்பாக இருந்தது.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசியுள்ள இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணி பயந்தது என்று நினைக்கிறேன். அவர்களது உடல்மொழியே அதை காட்டியது. டாஸ் போடும்போது விராட் கோலி மற்றும் பாபர் அசாம் பேசிய விதத்தை பார்க்கையில், யார் அழுத்தத்திற்கு இருந்தார் என்பது அப்பட்டமாகதெரிந்தது. 

பாகிஸ்தான் வீரர்களின் உடல்மொழி, இந்திய வீரர்களின் உடல்மொழியை விட சிறப்பாக இருந்தது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியதுபோல் அண்மைக்காலத்தில் ஆடியதே இல்லை. டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணி இந்திய அணி. கடந்த 2 - 3 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக ஆடியது. டி20  உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிகுந்த அழுத்தத்தில் இருந்தது இந்திய அணி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை