IND vs SL: பயிற்சியில் அதிரடி காட்டும் தவான் &கோ
விராட் கோலி தலைமையிலான முக்கிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில் இலங்கையுடன் ஷிகர் தவான் தலைமையிலான மற்றோரு அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
மேலும் இந்த அணியில் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் ராணா, சேதன் சக்காரியா உள்ளிட்ட இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 20 பேர் அடங்கிய இந்திய அணி கடந்த வாரம் இங்கிலாந்து சென்றடைந்து, 3 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துள்ள இந்திய அணி, தங்களுக்குள்ளாக இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.
அதன்படி ஷிகர் தவான் தலைமையிலான அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின. இப்புகைப்படங்களை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.