இரண்டாவது போட்டி தொடங்கும் நேரம் மாற்றம்; காரணம் இதுதான்!

Updated: Mon, Aug 01 2022 19:18 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளதால் 2ஆவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது.

3 ஒருநாள் போட்டிகள் மற்றும் முதல் டி20 போட்டி அனைத்தும் ட்ரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் தான் நடைபெற்றன. ஆனால் 2ஆவது மற்றும் 3ஆவது டி20 போட்டி செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு டாஸும் 8 மணிக்கு போட்டியும் தொடங்கவிருந்தது.

இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களே உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் திடீர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் 2ஆவது டி20 போட்டி ஒத்திவைக்கப்படுவதாகவும், உள்ளூர் நேரப்படி பகல் 11.30 மணிக்கும், இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கும் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மழைப்பொழிவு கிடையாது, வெளிச்ச பிரச்சினை கிடையாது, ட்ரிண்டாட்டில் இருந்து இரு நாட்டு வீரர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்துவிட்டனர். அப்படி இருந்தும் போட்டி தாமதமாவதற்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழப்பமடைந்திருந்தனர். 

இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட விளக்கத்தில், இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்த போதும், அவர்களின் உடமைகள் அனைத்தும் இன்னும் வார்னர் பார்க் மைதானத்திற்கு வந்து சேரவில்லை. அவர்களின் பேட், ஜெர்ஸிகள் என அனைத்து பொருட்களுமே வந்து சேர்வதற்கு தாமதமாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை