களத்தில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வது அவசியம் - மிதாலி ராஜ்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிதாலி ராஜின் அபார அரைசதத்தால் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி பியூமண்ட், நைட் ஸ்கைவர் அதிரடியால் 35 ஓவர்களிலேயே வெற்றியை பெற்று, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை விழ்த்தியது.
இப்போட்டிக்கு பிறகு பேசிய மிதாலி ராஜ், “இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் தோல்விகான காரணங்களை ஆராய்ந்து செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் அணியை ஸ்கோரை உயர்த்த முதல் ஐந்து வரிசையில் மேலும் ஒரு அதிரடி வீராங்கை தேவைப்படுகிறார்.
ஏனெனில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதையும், குறிப்பாக நம்மிடம் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் அவர்கள் திறமையானவர். அவர்கள் தங்கள் நிலைமைகளில் பந்து வீசுகிறார்கள். அதனால் அவர்களுக்கு எப்படி பந்து வீசுவது என்பது தெரியும்.
அதேபோல் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும் போது பந்துகளை வீணடிக்காமல், ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எங்களால் 250 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்க முடியும். அதுவே எங்களது வெற்றிக்கும் வழிவகுக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.