தென் ஆப்பிரிக்காவின் புதிய டி20 கேப்டனாக டெவிட் மில்லர் நியமனம்!

Updated: Wed, Jun 29 2022 16:33 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்டுகளிலும் அயர்லாந்தில் 2 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வெள்ளைப் பந்து அணியின் கேப்டன் பவுமா, இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை. 

இதனால் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணிக்கு கேஷவ் மஹாராஜும் டி20 அணிக்கு டேவிட் மில்லரும் புதிய கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். பவுமாவால் எட்டு வாரங்களுக்குப் பிறகே விளையாட முடியும் எனத் தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 19 அன்று தொடங்குகிறது. 

இந்நிலையில் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடர்களிலிருந்து காகிசோ ரபாடாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

 

டெஸ்ட் அணி: டீன் எல்கர் (கேப்டன்), சரேல் எர்வீ, கீகன் பீட்டர்சன், ரியான் ரிக்கெல்டன், ஐடன் மார்க்ரம், ராஸ்ஸி வான் டெர் டுசென், காயா சோண்டோ, கைல் வெர்ரேய்ன், டுவான் ஒலிவியர், ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், லூத்தோ சிபம்லா, கேசவ் மகராஜ், க்ளென்டன் ஸ்டூர்மேன், லுங்கி என்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே.

ஒருநாள் அணி: கேசவ் மகராஜ் (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஜான்மேன் மலான், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ரஸ்ஸி வான் டெர் டுசென், கயா சோண்டோ, கைல் வெரெய்ன், ஆண்டிலி ஃபெஹ்லுக்டோரி, ப்ரீவாடோரி மார்கோ ஜான்சன், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி, லிசாட் வில்லியம்ஸ்.

டி20 அணி: டேவிட் மில்லர் (கேப்டன்), குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம், ரிலீ ரோசோவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், வெய்ன் பார்னெல், அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவானிஸ், லுங்கி இங்கிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ஜெரால்ட் கோட்ஸி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை