ஐபிஎல் 2021: வாணவேடிக்கை காட்டிய இஷான், சூர்யா; பிளே ஆஃப்-க்கு முன்னேறுமா மும்பை?

Updated: Fri, Oct 08 2021 21:34 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 55ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா, இஷான் கிஷான் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ரோஹித் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடியது. இதில் சதத்தை நோக்கி சென்ற இஷான் கிஷான் 84 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் சூர்யகுமார் அரைசதம் அடித்தார். 

தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 84 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 82 ரன்களை சேர்த்தனர். ஹைதராபாத் அணி தராபில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், ரஷித் கான், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 65 ரன்களில் சுருட்டினால் மட்டுமே, அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை