ஐபிஎல் 14: ஐசிசி-க்கு பாடம் புகட்டுமா பிசிசிஐயின் புதிய விதிமுறைகள்?

Updated: Mon, Mar 29 2021 18:32 IST
IPL (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் இந்த சீசனுக்கான புதிய விதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு மூன்றாம் நடுவர் பரிசீலனைக்கு வரும் முடிவுகளில் சாப்ட் சிக்னல்
விதிமுறை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாம் நடுவர் சொல்வதே
இறுதி முடிவாகும். 

ஏனெனில் அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் சாப்ட்
சிக்னல் தொடர்பான சர்ச்சை எழுந்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும் கள நடுவர்கள் எடுக்கின்ற ஷார்ட் ரன், நோ பால் தொடர்பான முடிவுகளிலும் மூன்றாவது
நடுவர்கள் குறுக்கிடலாம் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. அதேபோல் இரண்டு இன்னிங்ஸின்
இறுதி ஓவரான இருபதாவது ஓவர் ஆட்டத்தின் 90 நிமிடங்களுக்குள் வீசியாக வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 90வது நிமிடத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ
இருபதாவது ஓவர் வீசினால் போதும் என்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

‌பிசிசிஐயின் இந்த புதிய விதிமுறைகள் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து
கடைபிடிக்கப்படவுள்ளதால், இத்தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்த
விதிமுறைகளை நடைமுறைபடுத்தவும் வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் நம்பிக்கை
தெரிவிக்கின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை