ஐபிஎல் 2021: ஆர்சிபியை ஊதித்தள்ளிய சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோரது அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 70 ரன்களையும், விராட் கோலி 53 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டூ பிளெசிஸ் 31 ரன்னிலும், கெய்க்வாட் 38 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த மொயீன் அலி - அம்பத்தி ராயுடு இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் மொயீன் அலி 23 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 32 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அதன்பின் களமிறங்கிய அணியின் மூத்த வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் கேப்டன் தோனி இணை இறுதிவரை விளையாடி வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதன்மூலம் 18 ஓவர்களிலேயே சிஎஸ்கே அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது.