ஐபிஎல் 2021 : பரபரப்பான ஆட்டத்தில் கேகேஆரை வீழ்த்தி சிஎஸ்கே த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது.
கொல்கத்தா நைட் ரைடஸ் அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 45 ரன்களையும், நிதிஷ் ராணா 37 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹசில்வுட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கெய்க்வாட் 40 ரன்னிலும், டூ பிளெசிஸ் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மொயீன் அலியும் அதிரடியாக விளையாடி 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, சென்னை அணியின் வெற்றி சிறுதி தாமதமானது.
இதனால் கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. கேகேஆர் அணி தரப்பில் 19 ஆவது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச, அதனை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜா 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தின் வெற்றியை உறுதிசெய்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆனால் கடைசி ஓவரில் சுனில் நரைன், சாம் கரண், ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் பரபரப்பை உண்டாக்கினார். இருப்பினும் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி வெற்றி இலக்கை எட்டி, 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 16 புள்ளிகளைப் பெற்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.