ஐபிஎல் 2021: டூ பிளெசிஸுடன் இணைந்து எனது திறனை வெளிப்படுத்துகிறேன் - ருதுராஜ் கெய்க்வாட்

Updated: Sat, Sep 25 2021 11:41 IST
IPL 2021: Faf du Plessis and I compliment each other really well, says Gaikwad
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

சிஎஸ்கே அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ் 31 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 38 ரன்களையும் சேர்த்தனர். 

போட்டி முடிவுக்கு பிறகு பேசிய கெய்க்வாட், “கடைசி போட்டியில் நாங்கள் வென்றபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், இந்த போட்டியிலும் வெற்றிபெற்றது மகிழ்ச்சி. ஒரு அணியின் தொடக்கம் எப்போதும் முக்கியம், ஏனெனில் புதிய பந்தில் நாங்கள் சேர்த்தாக வேண்டும்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

நானும், டூ பிளெசிஸும் ஒருவருக்கொருவர், எப்போது தாக்குவது, எந்த பந்துவீச்சாளரை டார்கெட் செய்வது என்பது பற்றி ஆலோசித்து அதற்கேற்றவாரு விளையாடுவோம். அவருடன் இணைந்து நானும் எனது திறனை வெளிப்படுத்தி வருகிறேன். அணிக்காக நாங்கள் என்ன செய்ய முடியும் என்பது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை