ஐபிஎல் 2021 இறுதிப்போட்டி: வானவேடிக்கை காட்டிய சிஎஸ்கே; கேகேஆருக்கு 193 ரன்கள் இலக்கு!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஈயான் மோர்கன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொத்தனர்.
இதில் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் டூ பிளெசிஸுடன் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து 31 ரன்கள் விளாசியிருந்த ராபின் உத்தப்பா, சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய மொயின் அலியும் தனது பங்கிற்கு சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஃபாஃப் டூ பிளெசிஸ் 86 ரன்களையும், மொயின் அலி 37 ரன்களையும் சேர்த்தனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடவுள்ளது.