ஐபிஎல் 2021: ஹர்திக் அதிரடியில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த மும்பை!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 42ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 42 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் பும்ரா, பொல்லார்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் என நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.
பின்னர் டி காக்குடன் ஜோடி சேர்ந்த சவுரப் திவாரி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 27 ரன்னில் டி காக் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சவுரப் திவாரி 45 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா - கீரேன் பொல்லார்ட் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் 19 ஓவர்களிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி அமீரகத்தில் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.