ஐபிஎல் 2021: திரிபாதி, வெங்கடேஷ் அதிரடியில் மும்பையை பந்தாடியது கேகேஆர்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 55 ரன்களையும், ரோஹித் சர்மா 33 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கைத் துரத்திய கொல்கத்தா அணியில் சுப்மன் கில் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி மளமளவென ஸ்கோரை உயர்த்தியது.
இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் பின் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெங்கடேஷ் ஐயர், பும்ரா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ராகுல் திரிப்பாதி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் திரிபாதி 74 ரன்களைச் சேர்த்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியது.