ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 41ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
Advertisement
இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசியது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - தவான் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. இதில் தவான் 24 ரன்னிலும், ஸ்மித் 39 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
Advertisement
அதன்பின் களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 39 ரன்களைச் சேர்த்தார். ஆனால் பின்னர் வந்த வீரர்கள் யாரும் சோபிக்காததால், அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே சேர்த்தது.
கொல்கத்தா அணி தரப்பில் ஃபர்குசன், நரைன், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.